Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து விற்பனையாகிறது.
Published on: November 8, 2024 at 10:22 am
Gold Rate today in Chennai | சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்நது சரிவை சந்தித்து. இது சற்று ஆறுதலை தரும் வகையில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,200 க்கும், பவுன் ரூ. 57,600 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து கிராம் ரூ. 7,285 ஆகவும் பவுன் ரூ. 58,280 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,790 ஆகவும் பவுன் ரூ. 62,320ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் ரூ.102-க்கும் கிலோ வெள்ளி ரூ.102,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் ரூ.103 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
புதுடெல்லி, ஏப்.17 2025: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. புகைப்படம் எடுப்பது, வரைபடங்களைப் பயன்படுத்துவது, அழைப்பு விடுப்பது மட்டுமின்றி ஒரு இடத்துக்கு சென்றால் டாக்ஸியை முன்பதிவு செய்யவும் பயன்படுகிறது.
இந்த நிலையில், நீங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரியை இழந்தால், அதனை தக்க வைப்பதற்கான குறிப்புகள் இங்கே உள்ளன.
நீங்கள் வெகு தொலைவில் இருக்கும்போது, மின் சேமிப்பு பயன்முறையை இயக்கவும். இது திரையின் பிரகாசத்தைக் குறைக்கிறது. மேலும், பின்னணி பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
உங்கள் தொலைபேசியை நீங்கள் பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிய அடாப்டிவ் பேட்டரியை இயக்கவும். இது அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கு அதிக சக்தியை அளிக்கிறது மற்றும் பிறவற்றை கட்டுப்படுத்துகிறது.
இதற்கு, அமைப்புகள் > பேட்டரி > தகவமைப்பு பேட்டரியின் கீழ் இதைக் கண்டறியவும். சாம்சங் போன்களில், இது பேட்டரி > மின் சேமிப்பு > தகவமைப்பு மின் சேமிப்பு என்பதன் கீழ் உள்ளது.
உங்கள் தொலைபேசியில் OLED அல்லது AMOLED திரை இருந்தால், டார்க் பயன்முறையை இயக்குவது பேட்டரியைச் சேமிக்கும்.
“ஹே கூகிள்” குரல் கண்டறிந்து முடக்கவும். மேலும், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் அழகாகத் தெரிந்தாலும், அவை தொடர்ந்து மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆப்பிள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
கொல்கத்தா, ஏப்.17 2025: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசக் என்ற இடத்தில் வியாழக்கிழமை (ஏப்.17 2025) மர்ம பொருள் ஒன்று வெடித்து சிறதியது. இதற்கிடையில், குண்டு போன்ற பொருள் வெடித்ததில் ஐந்து குழந்தைகள் காயமடைந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், கலியாசக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திர்காநகர் பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்தில் இந்த வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் வெடித்துள்ளது.
இதில், எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் காயமுற்றனர். இவர்கள் அந்தப் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த பொருளைக் கண்டதாக அதிகாரி கூறினார்.
அவர்களில் ஒருவர் அதை உதைத்துள்ளார். இந்த நிலையில், அந்த பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதில், ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்; ‘நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்’.. மோடியை தாக்கிய மம்தா பானர்ஜி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திருவனந்தபுரம், ஏப்.17 2025: நடிகரும் இயக்குனருமான பிரித்திவிராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் எம்புரான். இது 2019ஆம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்தப் படத்திலும் பிரித்திவி ராஜ் சுகுமாறன் முக்கிய கதாபாத்திரல் நடித்துள்ளார்.
படத்தில் சர்ச்சைகள்
இந்தப் படத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு காட்சிகளுக்கு கேரள பா.ஜ.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், முல்லை பெரியாறு அணை குறித்தும் தவறான தகவல்கள் படத்தில் இருப்பதாக தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால், கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பான சில காட்சிகள் நீக்கப்பட்டன். எனினும், முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் நீக்கப்படவில்லை என்ற குற்றஞ்சாட்டு தொடர்ந்தது.
ஓடிடி ரிலீஸ்
இந்த சர்ச்சைகள் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இதுவரை படம் ரூ.250 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இன்று (ஏப்.17 2025) அறிவிப்பு வெளியானது. அதன்படி, படம் ஏப்.24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்புரான் திரைப்படத்தை திரையில் தவறவிட்டவர்கள் ஒடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.
இதையும் படிங்க : அஜித் குமாருடன் கார் பயணம்.. மிஸ் செய்கிறேன் என்கிறார் பிரியா வாரியர்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஏப்.17 2025: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாரின் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தில் அஜித்தின் பழைய தோற்றம் பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தின் 7ம் நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபீஸ் வசூல்
அதன்படி, படம் 7ம் நாள் முடிவில் ரூ.189 கோடி வசூலித்துள்ளது தெரியவருகிறது. முன்னதாக, ஆறு நாட்களில் குட் பேட் அக்லி ₹113.85 கோடி நிகர வசூலையும், இந்தியாவில் ₹134.00 கோடி வசூலையும் வசூலித்து இருந்தது எனக் கூறப்பட்டது. இந்தப் படம் வெளிநாடுகளிலிருந்தும் ₹53.00 கோடி வசூலித்தது, இதன் மூலம் அதன் மொத்த உலகளாவிய வசூல் ₹189 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டின் அதிகப்பட்ச வசூலை செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் குட் பேட் அக்லி நிகழ்த்தியுள்ளது. இது ராம் சரணின் கேம் சேஞ்சரின் வாழ்நாள் உலகளாவிய வசூலான ₹186.25 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், குட் பேட் அக்லி சங்கராந்திகி வாஸ்துனம் (₹255.2 கோடி), எல்2 எம்பூரான் (₹264 கோடி) ஆகியவற்றுடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை: பரபரப்பு புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com