WFH in Delhi: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.
WFH in Delhi: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தே வேலை என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Published on: May 14, 2026 at 8:04 pm
புதுடெல்லி, மே 13, 2026: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, எரிபொருள் சேமிப்பு மற்றும் ஆற்றல் திறன் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதில் வாரத்தில் இரண்டு நாட்கள் வேலை வீட்டிலிருந்து (WFH), ‘மெட்ரோ மண்டே’, வாராந்திர ‘வாகனமில்லா நாள்’, புதிய அரசு வாகனங்கள் வாங்குவதில் தடை போன்றவை அடங்கும்.
முக்கிய அறிவிப்புகள்
எரிபொருள் செலவு குறைப்பு
அதிகாரிகளின் மாதாந்திர பெட்ரோல்/டீசல் ஒதுக்கீடு 20% குறைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணங்கள் – ஒரு வருடத்திற்கு நிறுத்தப்பட்டன.
அதிகாரப்பூர்வ கூட்டங்கள் – 50% ஆன்லைனில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் கார் ஊர்திகள் 60% குறைக்கப்பட்டு, 4 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 2 மின்சார வாகனங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அலுவலக நேரம் மாற்றம்
மேலும், அலுவலக நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் காலை 10:30–மாலை 7:00, வரையும், எம்.சி.டி அலுவலகங்கள் காலை 8:30–மாலை 5:00 வரையும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கேரள முதலமைச்சர் பந்தயம்.. கே.சி வேணுகோபாலை வி.டி சதீசன் வீழ்த்தியது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com