இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவி மிரட்டல்.. 3 மாணவர்கள் கைது

Krishnagiri : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 14, 2026 at 9:16 pm

கிருஷ்ணகிரி, மே 14 2026: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பள்ளி மாணவி ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, அதை இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி சில பள்ளி மாணவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி, அவர்கள் கூறியபடி தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாணவியின் தந்தைக்கு அனுப்பி, ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : தூத்துக்குடியில் வாலிபர் கொடூரக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com