Thoothukudi : தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thoothukudi : தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 12, 2026 at 6:30 pm
தூத்துக்குடி, மே 12 2026: தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லைநகர் கல்லறை தோட்டத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கழுத்து மற்றும் முகப்பகுதிகளில் பலத்த ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை.
மேலும், அவர் எதற்காக மற்றும் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வாலிபரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் மற்றும் ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரி சிறுமி கடத்தல் கொலை.. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com