திரையில் மோகன் லால் மகள்.. மாயக்குட்டி என வாழ்த்திய லாலேட்டன்!

Vismaya’s Debut Set : நடிகர் மோகன் லால் மகள் விஸ்மயாவின் முதல் படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகிறது.

Published on: May 14, 2026 at 7:56 pm

திருவனந்தபுரம், மே 14, 2026: விஸ்மயா மோகன்லால் நடித்த முதல் படம் ‘தொடக்கம்’ ஆகஸ்ட் 7, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று மோகன்லால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் ஜூட் ஆன்தனி ஜோசப் இயக்கத்தில், ஆன்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் (ட்விட்டர்) கணக்கில் “#Thudakkam Worldwide Release | AUGUST 7, 2026” என அறிவித்தார். அதாவது, தொடக்கம் திரைப்படம் உலகெங்கிலும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படம் ஓணம் பண்டிகை சீசனில் வெளியாகும் என முன்பே கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம், விஸ்மயாவின் அறிமுகத்தை “ஒரு பிரகாசமான புதிய அத்தியாயம்” என வரவேற்றுள்ளது.

இந்தப் படத்தை ஜூட் ஆன்தனி ஜோசப் இயக்கியுள்ளார்; ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள நிலையில், படத்தில் ஆஷிஷ் ஜோ ஆன்டனி (ஆன்டனி பெரும்பாவூரின் மகன்), பாபி குரியன், ஜிபின் கோபிநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில், ஜோமன் டி ஜான் (ஒளிப்பதிவு), ஜேக்ஸ் பெஜாய் (இசை), விஷ்ணு கோவிந்த் (சவுண்ட்), சாமன் சக்கோ (எடிட்டிங்), யானிக் பென் & ஸ்டண்ட் சில்வா (அதிரடி காட்சிகள்) என மிகப்பெரிய தொழில்நுட்ப குழு பணியாற்றியுள்ளது.

விஸ்மயா மோகன் லால்

விஸ்மயா, முன்னதாக கிரென்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற கவிதைத் தொகுப்பு எழுதியவர் ஆவார். இவர், திரையுலகில் தனது சகோதரர் பிரணவ் மோகன்லால் போலவே நடிப்பில் அறிமுகமாகிறார்.
இதற்கிடையில், மோகன்லால் தனது மகளை “மாயக்குட்டி” என்று அழைத்து, “இந்த தொடக்கம் சினிமாவுடன் வாழ்நாள் காதலின் முதல் படியாக இருக்கட்டும்” என உணர்ச்சிப்பூர்வமாக வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தி தெரியாத சீதா தேவியா? சாய் பல்லவிக்கு சிக்கல்? படக்குழு முக்கிய முடிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com