ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

Narendra Modi : நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: May 11, 2026 at 12:13 pm

ஹைதராபாத், மே 11 2026: ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரிலிருந்து 126 டாலர் வரை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிபொருள் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே தேவையற்ற செலவுகளை மக்கள் குறைத்து சிக்கனமாக வாழ வேண்டும். மேலும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன உரங்களின் மீதான சார்பை விவசாயிகள் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து அந்நியச் செலாவணியை சேமிக்கவும் அவர் வலியுறுத்தினார். மேலும், மீண்டும் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work From Home) முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்!

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! CM Vijay

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com