Sourav Ganguly : மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளுக்கு மத்தியில், உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா? என சௌரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டிடம் கேட்டுள்ளார்.
Sourav Ganguly : மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளுக்கு மத்தியில், உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா? என சௌரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டிடம் கேட்டுள்ளார்.

Published on: May 15, 2026 at 4:38 pm
புதுடெல்லி, மே 15, 2026: சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் மிகக் கருங்காலமான ‘மேட்ச்-பிக்சிங்’ சர்ச்சைக்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிடிடம் “உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா?” என்று நேரடியாகக் கேட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.
சர்ச்சை பின்னணி
2000 ஆம் ஆண்டில் முகம்மது அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் மேட்ச்-பிக்சிங் விவகாரத்தில் வெளிவந்ததால், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அசாருதீன் வாழ்நாள் தடையை எதிர்கொண்டார். மேலும், ஜடேஜா 5 ஆண்டு தடை ஆகியவற்றால் அணி தலைமை வெற்றிடமாகியது.
நேரில் கேட்ட கங்குலி
இந்த நிலையில், சௌரவ் கங்குலி, “நான் கேப்டனாக ஆனபோது, பந்தயம், மேட்ச்-பிக்சிங் பற்றி எனக்கு தெரியாது. சச்சின், டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோரிடம் ‘உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா?’ என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் ‘இல்லை’ என்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சௌரவ் கங்குலி, “எனக்கு யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே, அது உண்மையிலேயே நடக்கிறதா என தெரியவில்லை” என்று கூறினார்.
கங்குலி சாதனை
27 வயதில் கேப்டனாக ஆன கங்குலி, நாட்வெஸ்ட் டிரோபி (2002), பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி, ஆஸ்திரேலியாவில் 1-1 டிரா போன்ற சாதனைகளைப் பெற்றார். மேலும், அவர் அணியின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வாயை மூடி சும்மா இரு டா.. கம்பீரை அதட்டிய ராகுல் டிராவிட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com