Bajaj Century of Growth : பஜாஜ் குழுமம் தனது 100 ஆண்டு கால பயணத்தை மும்பையில் மே 12, 2026 அன்று சிறப்பாகக் கொண்டாடியது.
Bajaj Century of Growth : பஜாஜ் குழுமம் தனது 100 ஆண்டு கால பயணத்தை மும்பையில் மே 12, 2026 அன்று சிறப்பாகக் கொண்டாடியது.

Published on: May 15, 2026 at 3:34 pm
Updated on: May 15, 2026 at 3:35 pm
மும்பை, மே 15, 2026: பஜாஜ் குழுமம் தனது 100 ஆண்டு கால பயணத்தை மும்பையில் மே 12, 2026 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. $148 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய குடும்ப தொழில் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், ஆட்டோமொபைல், நிதி சேவைகள், மின் சாதனங்கள் மற்றும் பொறியியல் துறைகளில் செயல்பட்டு, மூன்று இந்திய குடும்பங்களில் ஒன்றுக்கு சேவை வழங்கி வருகிறது.
1926 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மகாத்மா காந்தியின் தத்துப்பிள்ளையாகக் கருதப்படும் ஜம்னாலால் பஜாஜ் நிறுவிய இந்த குழுமம், 130,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் செய்கிறது. பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற நிறுவனங்கள் அதன் முக்கிய அங்கங்களாக உள்ளன.
இந்த மைல்கல் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, “நூறு ஆண்டுகள் என்பது நீண்ட ஆயுளை மட்டுமல்ல, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனையும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், பஜாஜ் குழுமம் இந்தியாவின் வளர்ச்சியில் பல தசாப்தங்களாக முக்கிய பங்கு வகித்திருப்பதை அவர் பாராட்டினார். இந்த நூற்றாண்டு விழாவில் பஜாஜ் குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசை நிகழ்ச்சி, ‘பஜாஜ் 100 ஆண்டுகள்’ லோகோ வெளியீடு, ஜம்னாலால் பஜாஜ் மற்றும் காந்தி பற்றிய திரைப்படம் ஆகியவை விழாவின் சிறப்பம்சங்களாக இருந்தன.
பஜாஜ் குடும்பத்தினர் உரைகளில், “தனிப்பட்ட லாபத்தை விடப் பொது நலனே முக்கியம்” என்ற ஜம்னாலால்ஜியின் தத்துவம், உலகளாவிய வளர்ச்சி, சமூகப் பொறுப்புணர்வு, இளைஞர்களின் திறன் மேம்பாடு ஆகியவை வலியுறுத்தப்பட்டன. அடுத்த 100 ஆண்டுகளிலும் பஜாஜ் குழுமம் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : ஃப்ளெக்ஸி கேப் vs ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்.. நீண்ட கால முதலீடுக்கு எது உகந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com