Delhi: டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், டிரைவர் மற்றும் நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Delhi: டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், டிரைவர் மற்றும் நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Published on: May 14, 2026 at 4:39 pm
புதுடெல்லி, மே 14, 2026: டெல்லியில் நடந்த கொடூர சம்பவம், வெகுஜன சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு பெண், ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணம் செய்தபோது, டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இதில், பாதிக்கப்பட்ட பெண் டெல்லி–ஜெய்ப்பூர் பாதையில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண் டிரைவர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், டெல்லி போலீஸ் விரைவாக விசாரணையை தொடங்கினார்கள். இதில் சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும், பொது போக்குவரத்தில் சி.சி.டி.வி கேமரா, பெண்கள் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் போன்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க : கேரள முதலமைச்சர் பந்தயம்.. கே.சி வேணுகோபாலை வி.டி சதீசன் வீழ்த்தியது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com