வெள்ளகாடான ஸ்பெயின்; 213 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்!

Spain Floods | ஸ்பெயின் நாட்டில் பெய்ய கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

Published on: November 3, 2024 at 10:55 am

Spain Floods | ஸ்பெயின் நாட்டில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் பல மாகாணங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களிலேயே கொட்டித்தீர்த்ததால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீருடன் சேறும் வீடுகளை சூழ்ந்து.

ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.எனவே மீட்பு படையினர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள் மற்றும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க மாஸ்க் கட்டாயம்; மோசமான பட்டியலில் லாகூர் முதலிடம்: என்ன தெரியுமா?

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள்
Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com