Suzhal the Vortex | நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சுழல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Suzhal the Vortex | நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சுழல் தொடரின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 3, 2024 at 11:56 am
Updated on: November 3, 2024 at 11:57 am
Suzhal the Vortex | நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது “சுழல்“ வெப் தொடர்.
இதில், ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் கிரைம் திரில்லர் கதையாக உருவான இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் இத்தொடரின் இரண்டாம் பாகம் ‘சுழல் 2’ என்ற தலைப்பில் தற்போது தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் நடிகை கவுரி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை முதல் பாகத்தை இயக்கியிருந்த புஷ்கர் காயத்ரி இயக்குகிறார். சுழல் 2 வின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இதன் ரிலீஷ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 2024 ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “சுழல் 2“ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க உண்மையான அமரன்; யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com