Mythology | சீதையின் பாதம் பதிந்த காலடித்தடத்தில் சுரக்கும் நீர் பற்றி தெரியுமா?
அனுமன் பிறந்த மாதம் ; மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம்
Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?…
Mythology | சீதையின் பாதம் பதிந்த காலடித்தடத்தில் சுரக்கும் நீர் பற்றி தெரியுமா?
Published on: November 3, 2024 at 12:25 pm
Mythology | ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற மாவட்டத்தில் லேபாக்ஷி என்னும் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் மிகவும் பிரபலமான வீரபத்திரர் கோவிலில் உள்ள பாறை ஒன்றில் சீதையின் வலது பாதம் பதிந்த காலடித்தடம் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்த கால் தடத்தினுள் வற்றாது நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. நீர் எப்போதும் சுரந்து கொண்டிருப்பதை ஆராய்ச்சி மூலமும் யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்தப் பாதத்தை சுற்றி வற்றாமல் நீர் சுரப்பது சீதையின் பாதம் என்று நம்புவதற்கு ஒரு காரணமாக உள்ளது. கோடைக்காலத்தில் கூட இந்த பாதத்தின் பெருவிரலில் தண்ணீர் வற்றாமல் இருப்பதை காண முடிகிறது. இந்த கால் தடம் சுமார் 2 ½ அடி நீளத்துடனும், 1 ½ அடி அகலத்துடனும் இருக்கிறது. இந்தப் பாதத்தின் அளவைக் கொண்டு கணிக்கும் பொழுது சீதையின் உயரம் சுமார் 20’5 அடிகளாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
அதற்கான வரலாற்று குறிப்புகளாக ராமாயண காலத்தில் மனிதர்களின் உயரம் 20’5 அடிகள் என்கின்றனர். மேலும் த்ரேதா யுகத்தில் மனிதர்கள் மிகவும் உயரமாக இருப்பார்கள் அவர்களின் உயரம் 20’5 அடிகள் எனவும் கலியுகத்தில் 7 லிருந்து 9 அடிகளாக உள்ளன எனவும் சொல்லப்படுகிறது. சீதை, ராமன் வனவாசத்தின் போது, ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயற்சித்தான்.
அப்போது ஜடாயு என்ற பறவை சீதாதேவியை காப்பதற்காக ராவணனுடன் கடுமையாக போரிட்டது. போரில் ராவணன் ஜடாயு பறவையின் இறக்கைகளை வெட்டி விடுகிறான். இதனால் அங்கிருந்த பாறையின் மீது ஜடாயு விழுந்தான். அப்போது ஜடாயுக்கு தேவையான நீரை கொடுப்பதற்காக பாறையின் மீது சீதை தன் காலடி பதிக்க அதிலிருந்து வற்றாது நீர் சுரந்தது.
அதை அருந்தி ராமர் வரும்வரை உயிருடன் இருந்து சீதையைப் பற்றிய தகவலை ராமரிடம் சொல்லி ஜடாயு பறவை முக்தியடைந்ததாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் லே என்றால் ‘எழு’ மற்றும் பக்ஷி என்றால் ‘பறவை’ என்று பொருள். ஜடாயுவின் நிலையை கண்ட பின்னர் ராமர் ஜடாயு பறவையை எழுந்திருக்கும்படி கூறியிருப்பார். லேபாக்ஷி என்பதற்கான அர்த்தம் ‘எழுந்திரு பறவையே’ என்பதாகும். இதனால் தான் இந்த ஊருக்கு ‘லேபாக்ஷி’ என்ற பெயர் வர காரணம் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க : கடும் தவம்; பன்றி உடன் சண்டை: அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் கிடைத்தது எப்படி?
Greatness of the Margazhi month | மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா?…
Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?…
இந்தியாவில் நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ள இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….
Mythology | ஸ்ரீ ராமபிரான் மீது அதிக அன்பும் பக்தியும் வைத்திருப்பது யார் தெரியுமா?…
Mythology | இந்த பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளாக கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com