India Dominates U-17 Boxing : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டை அரையிறுதிக்கு முன்னேறினர்.
India Dominates U-17 Boxing : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டை அரையிறுதிக்கு முன்னேறினர்.

Published on: May 13, 2026 at 11:33 am
தாஷ்கண்ட், மே 13, 2026: இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள், உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கெந்தில் நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு அரையிறுதியில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர்.
17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எட்டு வீராங்கனைகள் இன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். ஆனால், நான்கு இந்திய வீராங்கனைகள் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கத்தில் சமரசம் செய்ய வேண்டி வந்தது. 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு அரையிறுதிகள் நேற்று (மே 12, 2026 நடைபெற்றன. இரு பிரிவுகளின் இறுதிப்போட்டிகள் மே 15ஆம் தேதி நடைபெறுகின்றன.
15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆறு வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஏழு வீரர்கள் நேற்று வெண்கலப் பதக்கத்தில் சமரசம் செய்தனர். இந்தியாவின் ஒன்பது பெண்கள் வரலாற்றுச் சாதனை படைத்து 15 வயதுக்குட்பட்ட பிரிவு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 27 பதக்கங்கள்.. தட்டித் தூக்கிய இந்திய வீரர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com