Polluted City in the world | உலகிலேயே அதிகம் மாசடைந்த மாநிலத்தின் பெயரை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Polluted City in the world | உலகிலேயே அதிகம் மாசடைந்த மாநிலத்தின் பெயரை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Published on: October 29, 2024 at 8:50 pm
Updated on: October 29, 2024 at 9:39 pm
Polluted City in the world | உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில், பாகிஸ்தானின் லாகூர் நகரம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு எல்லை அளவை விட லாகூர் நகரம் 86 மடங்கு அதிக காற்று மாசடைந்துள்ளது. இந்நகரின் காற்று தரக்குறியீடு 708 ஆக உள்ளது.
அதிகப்படியான காற்று மாசுபாட்டால், லாகூர் நகரின் லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் கூட தீங்கு விளைவிக்கும் புகைப்பனி காணப்படுகிறது. வேளாண் கழிவுகளை எரிப்பதில் தொடங்கி, கட்டுப்பாடற்ற வாகன புகை வெளியேற்றம், பழைய காலத்து தொழிற்சாலை நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய திறனற்ற ஒட்டுமொத்த பார்வை வரை இந்த காற்று மாசுபாட்டுக்கான காரணிகளாக உள்ளன.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் முக கவசங்களை அணியும்படியும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளும்படியும் மூத்த அமைச்சரான மரியும் அவுரங்கசீப், அவசரநிலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தானில் தற்கொலைபடை தாக்குதல் ; 8 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com