Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பிரியங்கா காந்தி எல்.டி.எஃப்-ன் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சத்யன் மொகேரி மற்றும் கோழிக்கோடு மாநகராட்சியின் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். ஈங்கப்புழாவில் நடந்த கார்னர் மீட்டிங்கில் பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
மத்தியில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மக்கள் மற்றும் தேசத்தின் மீது மரியாதை இன்மையை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவரது கொள்கைளின் நிலைப்பாடு இதனை காட்டுகிறது. மோடி அரசின் கொள்கைகள் எப்போதும் ஐந்து ஆறு தொழில் நண்பர்களுக்கு மட்டுமே சாதகமான வகையிலேயே இருக்கும். அது மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.
வயநாடு நிலச்சரிவு பாதிப்பின்போது பிரதமர் மாவட்டத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டார். அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், பல மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. என்று கூறினார்.
இதையும் படிங்க மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
kerala Minor girl Rape case : கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
Pathanamthitta girl assault case | தடகள வீராங்கனையான அந்தப் பெண் தனது அண்டை வீட்டார், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் உள்ளிட்ட…
Malappuram Elephant viral video | கேரள மாநிலம் மலபுரம் மாவட்டத்தில் உள்ள பி.பி. அங்காடி மசூதியில் நடந்த விழாவில் யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்