இந்திய இசை ராணி.. யார் இந்த அம்பிகா நாயக்?

Kayan Rejects Labels : இந்திய இசையை கயன் என்ற அம்பிகா நாயக் அலங்கரித்து வருகிறார்; இவரின் இசை இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

Published on: May 18, 2026 at 3:30 pm

புதுடெல்லி, மே 18, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த பாடகியும், இசையமைப்பாளருமான கயன் என்ற அம்பிகா நாயக் இசைத்துறையின் கட்டுப்பாடுகளை மறுத்து, தனித்துவமான பாணியை காப்பாற்றி வருகிறார். அவரின் கூற்றின்படி, “இந்திய இசை தற்போது தனது சிறந்த தருணத்தை அனுபவிக்கிறது” என்கிறார்.

பாடகி கயனின் கலைப்பயணம்

பாடகி கயனை பொறுத்தமட்டில், டி.ஜே கான்சோல், பெரிய இசை விழாக்கள், தனிமையில் எழுதும் பாடல்கள் என பல்வேறு மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கூல் கிட்ஸ், சிம்பிளிபிளை, லோன்லி போன்ற பாடல்கள் மூலம் பாப், ஆர் அண்ட் பி, எலக்ட்ரானிக் இசை கலவையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய கயன், ““எனது இசையில் உண்மைத்தன்மை முக்கியம்; சந்தை விதிகளுக்காக என் பாணியை மாற்ற மாட்டேன்” என்றார். மேலும், சமூக ஊடகங்கள் குறித்து அவர் பேசுகையில், ““சமூக ஊடகம் அனைத்தையும் மாற்றிவிட்டது. அது அற்புதமானதாய் இருந்தாலும், பயமுறுத்தும் ஒன்றாகவும் உள்ளது” என்றார்.

இதுமட்டுமின்றி, உண்மையான நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். எப்போதும் உங்கள் வலிமையை பின்பற்றுங்கள்” என்றார்.

இதையும் படிங்க : வசூலில் முத்திரை பதிக்கும் கருப்பு.. கம்பேக் கொடுத்த சூர்யா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com