வசூலில் முத்திரை பதிக்கும் கருப்பு.. கம்பேக் கொடுத்த சூர்யா?

Karuppu on Day 3 : நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூலில் முத்திரை பதித்து வருகிறது; படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Published on: May 18, 2026 at 12:40 pm

Updated on: May 18, 2026 at 12:41 pm

சென்னை, மே 18, 2026: சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் மூன்றாம் நாளில் (ஞாயிறுக்கிழமை) வெற்றிகரமாக ₹66 கோடி இந்திய நெட் வசூலை கடந்துள்ளது. இந்தப் படம் வார இறுதி மற்றும் ரசிகர்களின் உற்சாகம் காரணமாக, இந்தியாவில் ₹68 கோடி நெட், ₹78.75 கோடி கிராஸ், உலகளவில் ₹120 கோடி வசூலை எட்டியுள்ளது.

தினசரி வசூல் விவரம்

கருப்பு படம் வெளியான முதல் நாளில் (மே 15, 2026) ₹15.50 கோடி வசூல் ஈட்டியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளில் ₹24.15 கோடியும், 3ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ₹28.35 கோடி வசூலும் ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் மொத்த இந்திய நெட் வசூல் ₹68 கோடியாக தற்போது உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் மொத்த இந்திய கிராஸ் வசூல் ₹78.75 கோடியாக காணப்படுகிறது.

மொழிவாரியான வசூல்

கருப்பு படத்தை பொறுத்தவரை தமிழில் ₹24.20 கோடியும், தெலுங்கில் ரூ.4.15 கோடியும், வெளிநாட்டில் ரூ.13 கோடியும், உலகளவில் ரூ.120.75 கோடியும் வசூலித்துள்ளது. சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ளார். நீதிமன்ற நாடகமான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், நடிகர்கள் நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்களும் படத்தின் வெற்றியை வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது என் கனவு.. கொரிய நடிகை யேரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com