சரோகேட் அட்வர்டைசிங் என்றால் என்ன? நடிகர் ஷாருக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன்?

Surrogate advertising meaning; சரோகேட் அட்வர்டைசிங் என்றால் என்ன? நடிகர் ஷாருக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன்? என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

Published on: August 17, 2026 at 4:45 pm

மும்பை ஆகஸ்ட் 17, 2026; விமல் ஏலச்சி விளம்பரங்களைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஷாருக் கான், அஜய் தேவ்கன், மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காரணம், இந்த விளம்பரங்கள் “சரோகேட் அட்வர்டைசிங்” எனப்படும் மறைமுக விளம்பர முறையை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சரோகேட் அட்வர்டைசிங் என்பது, புகையிலை அல்லது மதுபானம் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை நேரடியாக விளம்பரப்படுத்தாமல், அதனுடன் தொடர்புடைய மற்றொரு பொருளை (உதாரணம்: ஏலச்சி) விளம்பரப்படுத்தி, அதே பிராண்டை பிரபலப்படுத்தும் முறையாகும். விமல் ஏலச்சி விளம்பரங்கள், உண்மையில் புகையிலை சார்ந்த பொருட்களை மறைமுகமாக விளம்பரப்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எஃப்.டி.ஏ , “இந்த விளம்பரங்கள், சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருட்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. அதனால், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் விளம்பரத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம்” என்று தெரிவித்துள்ளது. இதனால், பிரபலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த விவகாரம், விளம்பர உலகில் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது. “பிரபலங்கள், தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க; சினிமா எல்லைகளைத் தாண்டிய கலை.. UAE-ல் மாதவன் புதிய அத்தியாயம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com