இந்தவார Q4FY26 முடிவுகள்.. ஐ.டி.சி, பி.பி.சி.எல் மீது முதலீட்டாளர்கள் கவனம்!

Q4FY26 Earnings Week: இந்த வாரம் 2026 நிதியாண்டு நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியீடு மிகப் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: May 18, 2026 at 3:25 pm

சென்னை, மே 18, 2026: இந்த வாரம் 2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியீடு மிகப் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஐ.டி.சி, பி.பி.சி.எல், ஐ.ஓ.சி போன்ற முக்கிய நிறுவனங்களுடன் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிதி அறிக்கைகளை அறிவிக்க உள்ளன.

இதனால், முதலீட்டாளர்கள் குறிப்பாக எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஓ.எம்.சி மற்றும் பங்கு ஆதாயம் வழங்குவதில் சிறந்த ஐ.டி.சி மீது கவனம் செலுத்துகின்றனர். இதற்கிடையில், டிவிடென்ட் கிங் என அழைக்கப்படும் ஐ.டி.சி, FY26-க்கு வலுவான லாபம் மற்றும் டிவிடெண்ட் அறிவிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பி.பி.சி.எல்.-ஐ பொறுத்தமட்டில் எரிபொருள் விலை உயர்வால், மார்க்கெட்டிங் மார்ஜின் மற்றும் டிவிடெண்ட் அறிவிப்புகள் முக்கியமாக இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில், ஐ.ஓ.சி 97 நிறுவனங்களுடன் மே 18 அன்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இது தவிர என்.டி.பி.சி, சன் பார்மா, டோரன்ட் பார்மா, ஜுபிலியன்ட் ஃபுட்ஓர்க்ஸ் ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்தில் உள்ளன.

சந்தை தாக்கம்

எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஓ.எம்.சி (ஐ.ஓ.சி, பி.பி.சி.எல், இந்திர பிரஸ்தா கேஸ்) முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பார்மா மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்கள் (சன் பார்மா, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்) துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.

இதையும் படிங்க : வெள்ளி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு.. விலை சரியுமா? கூடுமா? வாங்கலாமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com