ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.30 சதவீதம் வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

FD rates: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.30 சதவீதம் வட்டி வழங்கும் வங்கி குறித்து பார்க்கலாம்.

Published on: August 7, 2026 at 3:34 pm

சென்னை, ஆக.7, 2026: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026-27 நிதியாண்டிற்கான மூன்றாவது இருமாத பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து நான்காவது முறையாக ஆர்.பி.ஐ தனது முக்கியக் கொள்கை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நிலையைத் தக்கவைத்துள்ளது.

ரெப்போ விகிதத்தில் மாற்றமின்றி இருப்பதால், வங்கிகள் தங்கள் நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்பு குறைவு. இது, குறிப்பாக நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதியவர்களுக்கு நல்ல செய்தியாகும்.

தற்போது சில சிறிய (ஸ்மால் ஃபைனான்ஸ்) நிதி வங்கிகள் உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. அதன்படி, ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 30 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை 7.90% வட்டி வழங்குகிறது. மறுபுறம், ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 888 நாட்களுக்கு 8.25% வட்டி வழங்குகிறது. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் (1095 நாட்கள்) வரை 8.30% வட்டி வழங்குகிறது.

இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 05, 2026 அன்று அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை ஆகும். மேலும், இதில் ரூ. 3 கோடிக்குட்பட்ட வைப்புகளுக்கான விகிதங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

மொத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிலையான கொள்கை முடிவு, வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத் திட்டங்களை நம்பிக்கையுடன் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிரிட்டானியா பங்குகள் 4 சதவீதம் உயர்வு.. பின்னணி என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com