தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.. தொல். திருமாவளவன்!

Thol Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Published on: November 5, 2026 at 4:21 pm

Updated on: November 5, 2026 at 4:22 pm

மதுரை, நவ.5, 2026: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்று கூறினார்.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதைத் தொடரும் என அவர் தெரிவித்தார். ஆதரவு அளிக்கும் கட்சிகள் பின்வாங்காத நிலையில், ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.70 கோடி வரை பணம் கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடைபெறுவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பதிலளித்த திருமாவளவன், இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு தவெக எம்எல்ஏக்கள் கட்சி மாறுவார்கள் என்று தாம் நம்பவில்லை என்றார்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு சுங்கக் கட்டண வசூலை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், வெற்றி பயணம் திட்டத்தால் வருமானம் பாதிக்கப்படுவதாகக் கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : விஜயை தொடர்ந்து அரசியலில் நடிகர் தனுஷ்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் உடன் சந்திப்பா?

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா! Deepika Raja

‘முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்’.. மொத ராத்திரி நடிகை தீபிகா ராஜா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com