Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Kerala’s New CM : கேரளத்தின் முதல் அமைச்சராக காங்கிரஸின் வி.டி. சதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 5 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published on: May 18, 2026 at 4:47 pm
Updated on: May 18, 2026 at 4:50 pm
திருவனந்தபுரம், மே 18, 2026; கேரள காங்கிரஸ் மாநிலத் தலைவர் வி.டி. சதீசன் இன்று (மே 18, 2026) மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், 20 அமைச்சர்களுடன் கூடிய யூ.டி.எஃப் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் ஆட்சிக்கு திரும்பிய வரலாற்றுச் சம்பவமாகும்.
வி.டி. சதீசன் முதலமைச்சராக பொறுப்பெற்றுக் கொண்ட விழா, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் காலை 10 மணிக்கு நடந்தது. இதில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் சத்தியப்பிரமாணம் நடத்தி வைத்தார்.
இந்த விழாவில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர்கள், பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில், 20 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இவர்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சென்னித்தலா, சன்னி ஜோசப், கே. முரளீதரன், ஏ.பி. அனில் குமார், பி.சி. விஷ்ணுநாத், டி. சித்திக், பிந்து கிருஷ்ணா, கே.ஏ. துலசி, ரோஜி எம். ஜான், எம். லிஜு, ஓ.ஜே. ஜநீஷ் ஆகியோர் ஆவார்கள்.
இதுதவிர இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து பி.கே. குன்ஹாலிகுட்டி, என். ஷம்சுதீன், கே.எம். ஷாஜி, பி.கே. பஷீர், வி.இ. அப்துல் கஃபூர் உள்ளிட்ட 5 பேரும், மற்ற கூட்டணி கட்சியில் இருந்து மான்ஸ் ஜோசப் (கேரள காங்கிரஸ் ஜோசப்), ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி), அனூப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் ஜேக்கப்), சி.பி. ஜான் (சி.எம்.பி). ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க : சீனுக்குள் வரும் அண்ணாமலை.. காய் நகர்த்தும் பா.ஜ.க தேசிய தலைமை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com