Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 6, 2026 at 4:44 pm
திருவனந்தபுரம், மே 6, 2026: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப். (UDF) வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டி தீவிரமாகியுள்ளது.
கே.சி. வேணுகோபால் முன்னிலை வகிக்கிறார் என்றாலும், வி.டி. சதீசன் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இறுதி முடிவு மே 11 அல்லது 12ஆம் தேதி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளத்தில், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப். 140 இடங்களில் 102 இடங்களை வென்று கேரளத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு திரும்பியுள்ளது. இதில், காங்கிரஸ் தனியாக 63 இடங்களை பெற்றுள்ளது.
இதில் 47 எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இந்த வெற்றிக்கு முக்கி காரணம் என சதீசன் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், சதீசனுக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அவரது முகாம் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கேரள காங்கிரஸ் (ஜோசப்) போன்ற கூட்டணி கட்சிகளும் சதீசனை ஆதரிக்கின்றன எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான் தோற்கவில்லை; ராஜினாமா செய்ய மாட்டேன்.. மம்தா பானர்ஜி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com