Maharashtra | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
Maharashtra | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
Published on: October 26, 2024 at 2:02 pm
Maharashtra | மகாராஷ்டிராவில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை (அக். 26, 2024) வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூடி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதித்த பின்னர் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தனது முதல் பட்டியலில் 48 வேட்பாளர்களை அறிவித்தது. இந்த பட்டியலை வைத்து தற்போது 71 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், “மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணியில் எந்த வேறுபாடும் இல்லை என்றும், அதன் அங்கத்தவர்களிடையே இறுதி சீட் பகிர்வு ஏற்பாடு சனிக்கிழமை (அக்டோபர் 26, 2024) மாலைக்குள் வெளியாகும்” என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை (அக். 25, 2024) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மகாராஷ்டிராவின் மீதமுள்ள இடங்கள் குறித்து காங்கிரஸ் விவாதிக்கும்” என்றார்.
மகாராஷ்டிரா தேர்தலுக்கான 48 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை (அக்.24, 2024) வெளியானது. இதில், முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அஜித் பவார் கட்சியில் இணைந்த பாபா சித்திக் மகன்: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com