Lubber Pandhu OTT Release | “லப்பர் பந்து“ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Lubber Pandhu OTT Release | “லப்பர் பந்து“ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: October 26, 2024 at 2:33 pm
Lubber Pandhu OTT Release | தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமான வரவேற்பிற்குப்பிறகு, படம் அக்டோபர் 31 (தீபாவளி) முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தொடங்குகிறது.
ஒரு சிறிய நகரத்தில் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் பிரியர்களின் ஈகோவைச் சுற்றி இப்படம் தொடங்குகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மற்றும் படத்தொகுப்பை மதன் செய்துள்ளார்.
இதையும் படிங்க ஹோட்டலில் நடிகை பலாத்காரம்: ஜானி மாஸ்டருக்கு ஜாமின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com