Maharashtra | மகாராஷ்டிராவின் மறைந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீஷான் சித்திக் (Zeeshan Siddique) அஜித் பவாரின் கட்சியில் இணைந்துள்ளார்.
Maharashtra | மகாராஷ்டிராவின் மறைந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீஷான் சித்திக் (Zeeshan Siddique) அஜித் பவாரின் கட்சியில் இணைந்துள்ளார்.
Published on: October 25, 2024 at 4:06 pm
Maharashtra | மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் அரசியல் சூழல் தொடர்ந்து சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மறைந்த மகாராஷ்டிர தலைவர் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் மும்பையில் என்சிபியில் இணைந்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸில் இருந்த சித்திக், இன்று (அக். 25) என்.பி.சி.யின் அஜித் பவார் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். மேலும் வந்த்ரே கிழக்கு தொகுதியில் இருந்து கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
என்சிபியில் இணைந்த உடனேயே, ஜீஷான் சித்திக் கட்சித் தலைவர் அஜித் பவாருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்த கடினமான காலங்களில் என்னை நம்பியதற்காக அஜித் பவார், பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.
மேலும், “எனக்கு பாந்த்ரா கிழக்கில் இருந்து வேட்புமனு கிடைத்துள்ளது; அனைத்து மக்களின் அன்பு மற்றும் ஆதரவுடன், நான் நிச்சயமாக மீண்டும் வந்த்ரே கிழக்கில் வெற்றி பெறுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
சித்திக் தவிர, முன்னாள் பாஜக தலைவர்களான நிஷிகாந்த் போசலே பாட்டீல், சஞ்சய்காகா பாட்டீல் மற்றும் பிரதாப் பாட்டீல் சிக்லிகர் ஆகியோரும் இன்று துணை முதல்வரும் கட்சித் தலைவருமான அஜித் பவார் முன்னிலையில் என்சிபியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இந்தியா கூட்டணிக்கு பூஸ்ட்; மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் கெஜ்ரிவால் பரப்புரை: ஆம் ஆத்மி தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com