Arvind Kejriwal | இந்தியா கூட்டணிக்கு பூஸ்ட்; மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் கெஜ்ரிவால் பரப்புரை: ஆம் ஆத்மி தகவல்!
Arvind Kejriwal | இந்தியா கூட்டணிக்கு பூஸ்ட்; மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் கெஜ்ரிவால் பரப்புரை: ஆம் ஆத்மி தகவல்!
Published on: October 24, 2024 at 9:34 pm
Arvind Kejriwal | மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் குறிப்பாக, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டாளிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) மற்றும் சரத் பவாரின் என்சிபி-எஸ்பி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பரப்புரை மேற்கொள்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஓர் அங்கமாகும். இதற்கிடையில் ஜார்க்கண்டிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை மேற்கொள்வார் என்றும் பரப்புரை அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹரியானா தேர்தல் முடிவுகள்
முன்னதாக நடைபெற்ற ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்: சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com