17 வயதில் நக்ஸலைட் ஆக விரும்பிய பவன்.. தடுத்து நிறுத்திய சிரஞ்சீவி!

Pawan Kalyan: 17 வயதில் நக்சலைட் ஆக விரும்பிய பவன் கல்யாண்; ‘துப்பாக்கி ஏந்தும் எண்ணம்’ குறித்து சிரஞ்சீவி தடுத்தது எப்படி?

Published on: June 11, 2026 at 1:21 pm

அமராவதி, ஜூன் 11, 2026: ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், தனது இளமைக் காலத்தில் நக்சலைட் இயக்கத்தில் இணையத் துணிந்த சூழலை சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் வெளிப்படுத்தினார். உலகின் அன்றைய நிலைமை, தென்னாப்பிரிக்க இனவெறி, இலங்கையின் விடுதலைப் புலிகள் இயக்கம், பனிப்போர் சூழல், ஜெர்மனியின் அரசியல் குழப்பம், காலிஸ்தான் தீவிரவாதம் போன்ற நிகழ்வுகள் தன்னை கடும் கோபத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கியதாக அவர் கூறினார். அந்த மனநிலையில் தான் துப்பாக்கி ஏந்தும் எண்ணம் தோன்றியதாகவும், நக்சலைட் இயக்கத்தில் இணையத் திட்டமிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

பவன் கல்யாண், 17 முதல் 21 வயது வரை அந்த மனநிலை நீடித்ததாகவும், அக்காலத்தில் ஒருவர் எளிதாக தீவிரவாத பாதையில் ஈர்க்கப்பட முடியும் எனவும் தெரிவித்தார். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டதும், மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டதும், குறும்பட விழாக்களில் பங்கேற்க மும்பை சென்றதும், ஆவணப்படங்களை உருவாக்கியதும் என இவை அனைத்தும் அவரது தேக்க நிலையும் கோபத்தையும் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.

(நன்றி: ஏ.என்.ஐ)

அந்த நேரத்தில் அவரது சகோதரர் சிரஞ்சீவி தலையிட்டு தடுத்தது தான் வாழ்க்கையை மாற்றியதாக பவன் கல்யாண் வலியுறுத்தினார். “உன் அண்ணன் சிரஞ்சீவியாக இல்லாவிட்டால், குடும்பப் பொறுப்புகள் உனக்கு இருந்தால், நீ இதே காரியத்தைச் செய்திருப்பாயா?” என்ற கேள்வி அவரை சிந்திக்க வைத்ததாகவும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டதாகவும் அவர் கூறினார். இதுவே அவரை ஆக்கபூர்வமான பாதைக்கு திருப்பியதாகவும் தெரிவித்தார்.

நடிப்புப் பயிற்சிக் வகுப்புகளுக்குச் செல்லும் முன்பு, ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியதாகவும், அதுவே அவரை தீவிரவாத எண்ணங்களில் இருந்து விலக்கியதாகவும் பவன் கல்யாண் கூறினார். தனது வாழ்க்கையின் அந்த முக்கியமான திருப்பத்தை வெளிப்படையாக பகிர்ந்த அவர், இளமைக் காலத்தில் ஏற்பட்ட மனக்குழப்பம் எவ்வாறு சகோதரரின் தலையீட்டால் மாற்றப்பட்டது என்பதை வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : ராம் சரணின் பெத்தி ஒரு வார கலெக்ஷன்ஸ் எவ்வளவு? முழு அறிக்கை!

சென்னையில் போட்டியிட முடியுமா? பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சேகர் பாபு கேள்வி
Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan can contest from Chennai says Shekhar Babu

சென்னையில் போட்டியிட முடியுமா? பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சேகர் பாபு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com