16 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனானார் அனஹத் சிங்

Anahat Singh Creates History : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் எகிப்தின் ருகய்யா சலேமை 3-0 என வீழ்த்திய அனஹத் சிங், உலக ஜூனியர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக நீடித்த எகிப்தின் ஆதிக்கத்துக்கும் அவர் முடிவுகட்டியுள்ளார்.

Published on: July 26, 2026 at 2:52 pm

நயாகரா-ஆன்-தி-லேக், ஜூலை 26 : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2026 மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை அனஹத் சிங் வரலாறு படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் எகிப்தின் ருகய்யா சலேம்-ஐ 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்தி, உலக ஜூனியர் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

18 வயதான அனஹத் சிங், போட்டி முழுவதும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த 16 ஆண்டுகளாக இந்த பட்டத்தை தொடர்ந்து வென்று வந்த எகிப்தின் ஆதிக்கத்திற்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு ஆசிய ஜூனியர் சாம்பியனான ஆர்யவீர் தேவன் இந்தியாவின் சிறந்த வீரராக 16-வது சுற்று வரை முன்னேறினார். யுஷா நஃபீஸ், குர்வீர் சிங் ஆகியோர் 32-வது சுற்றிலும், புரவ் ராம்பியா 64-வது சுற்றிலும் வெளியேறினர்.

தற்போது சீனியர் PSA சுற்றுப்போட்டியில் உலக தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் அறிமுகமாக உள்ள நிலையில், இந்த வெற்றியால் புதிய வரலாற்றை நோக்கி முன்னேறியுள்ளார். அவரது சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனோவால், ஹர்தீப் சிங் பூரி மற்றும் ரக்ஷா கட்சே உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா! ஆசிய சாம்பியனான இளம் ஹாக்கி அணி

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
ISSF World Cup

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com