மஸ்கட், ஜூலை 26 2026: எப்ஐஎச் (FIH) யூத் ஹாக்கி5ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் ஆண்கள் இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய சப்-ஜூனியர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ரோமித் பால், கேப்டன் கேதன் குஷ்வாஹா மற்றும் ஷாருக் அலி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவை ஆசிய சாம்பியனாக மாற்றினர்.
போட்டியின் முதல் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், ரோமித் பால் முதல் கோலை பதிவு செய்து 1-0 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார். தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியதும் கேதன் குஷ்வாஹா கோல் அடிக்க, அடுத்த சில நொடிகளிலேயே ஷாருக் அலி மேலும் ஒரு கோல் சேர்த்ததால் இந்தியா 3-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
பாகிஸ்தான் அணிக்காக முகமது உஸ்மான் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தாலும், இந்தியாவின் வலுவான தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியவில்லை. இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தையும், எலைட் பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் கைப்பற்றியது. மேலும், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் முதல் FIH இளைஞர் ஹாக்கி உலகக் கோப்பைதொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மகளிர் பிரிவில் இந்திய சப்-ஜூனியர் அணி இறுதிப்போட்டியில் சீனாவிடம் போராடி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
பரிசுத்தொகை
இரு அணிகளின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி, ஹாக்கி இந்தியா பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது. ஆண்கள் தங்கம் வென்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ₹2 லட்சம், பயிற்சியாளர் குழுவினருக்கு ₹1 லட்சம் வழங்கப்படும். மகளிர் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் ₹1 லட்சம், பயிற்சியாளர் குழுவினருக்கு ₹50,000 வழங்கப்படும்.
இதையும் படிங்க: இஷான் அதிரடி… அபிஷேக் மிரட்டல்! 90 ரன்களில் ஜிம்பாப்வேயை சாய்த்த இந்தியா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்