Mandaadi Promo Out : சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் புரோமோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mandaadi Promo Out : சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் புரோமோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published on: July 26, 2026 at 6:42 pm
சென்னை, ஜூலை 26, 2026: நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் அதிரடி புரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த விளையாட்டு அதிரடி திரைப்படத்தின் புரோமோ பாடலில், சூரியின் நடனமும், அவரது உடலமைப்பு மாற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடலை வேல்முருகன் மற்றும் வஹீசன் பாடியுள்ளனர். இணையத்தில் வெளியான உடனேயே பாடல் வைரலாகி வரும் நிலையில், திரையரங்குகளிலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரையிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி, இந்தப் படத்தில் கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் அதிரடியான நடன அசைவுகளுடன் முற்றிலும் புதிய தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’, பாரம்பரிய மீனவர்களின் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்சுத் குமார், பால சரவணன், மிதுன், கீர்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.
இதையும் படிங்க: ஹன்சிகாவின் புதிய படத்திற்கு ‘கபாலி’ டைட்டில்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com