Tirupati | ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirupati | ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: October 25, 2024 at 3:57 pm
Tirupati | ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தது. இதனால், போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று உடனடியாக முழுமையான சோதனை நடத்தினார்கள்.
இறுதியில் அச்சுறுத்தல்கள் ஒரு புரளி என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து திருப்பதி கிழக்கு காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, “மூன்று ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்துள்ளது.
மின்னஞ்சல் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம். விசாரணை முடிந்த பிறகு மின்னஞ்சலுக்குப் பின்னால் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்” என்றார்.
புதன்கிழமை மாலை லீலா மஹால், கபிலர் தீர்த்தம் மற்றும் அலிபிரி அருகே உள்ள மூன்று தனியார் ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com