மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு.. கோடை வெயில் காரணமா?

Marakkanam Salt Pans Active : மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

Published on: May 3, 2026 at 11:32 am

Updated on: May 3, 2026 at 11:42 am

சென்னை, மே 3, 2026: மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய- மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி அக்டோபர் மாதம் வரை தொடர்கிறது.
இந்த உப்பளங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அவர்கள் தினமும் அதிக நேரம் உழைத்து உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மரக்காணம் பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு உணவிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இங்குள்ள உப்பளங்களில் தயாராகும் உப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி உப்பு உற்பத்தி மையமாக விளங்குகிறது.

உப்பு உற்பத்தி அதிகரிப்பு

இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், உப்பு உற்பத்தி பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் உள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த சில தினங்களில் கத்திரி வெயில் துவங்க உள்ளதால், உப்பு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு உற்பத்தி சாதனை அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 5 கிலோ சிலிண்டர் வரலாறு காணாத விலை உயர்வு.. 48 சதவீதம் அதிகரிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com