தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு இடமில்லை.. மு.க ஸ்டாலின் வெற்றி பெறுவார்.. செல்வ பெருந்தகை!

DMK Alliance : தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Published on: May 3, 2026 at 1:05 pm

Updated on: May 3, 2026 at 1:06 pm

சென்னை, மே 3, 2026: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செல்வப்பெருந்தகை, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்” என்று உறுதியாகக் கூறினார்.

இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாடு மக்கள் தெளிவாக உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் அளித்துள்ள முடிவை காண்போம். எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. மக்கள் தீர்ப்பை ஏற்கனவே 35 சதவீதம் பேர் படித்திருப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “பிரதமர் மோடிக்கு ஒரு நாக்கு இல்லை, பல நாக்குகள் உள்ளன. தமிழகம் வரும்போது தமிழர் பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசுவார். ஆனால் வட இந்தியா சென்றால் தமிழர்களை விமர்சிப்பார். பீகாரில் திட்டினார், ஒடிசாவில் திருடர்கள் என்றார். மாற்றி மாற்றி பேசுபவர் மோடி” என விமர்சித்தார்.

இதையடுத்து, “தமிழகத்தில் பாசிசத்திற்கும், மதவாதத்திற்கும் எப்போதும் இடமில்லை. அதனால் தான் அவர்கள் இந்த தேர்தலில் படுதோல்வியடைய போகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. பியூஷ் கோயல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com