Senthil Balaji: டாஸ்மாக் ஊழல் வழக்கில், முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Senthil Balaji: டாஸ்மாக் ஊழல் வழக்கில், முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Published on: July 30, 2026 at 8:21 pm
புதுடெல்லி, ஜூலை 30, 2026 : டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம், ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த புதிய எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், உடனடி கட்டாய நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதால், மனுவை அவசர விசாரணையாகப் பட்டியலிட வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்விடம் கோரிக்கை விடுத்தனர். நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.
புதிய எஃப்.ஐ.ஆர்-இல், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த FIR-இல் இடம்பெற்றுள்ள விவரங்கள், அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பிரமாணப் பத்திரம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலிருந்து அப்படியே நகலெடுக்கப்பட்டதாக பாலாஜி வாதிடுகிறார்.
மூத்த வழக்கறிஞர் திவாரி, “2021 முதல் 2025 வரை நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காகவே இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம் இல்லை; காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. டாஸ்மாக் என்பது தனித்து இயங்கும் நிறுவனம்; எனக்கு நேரடிப் பங்கோ தொடர்போ இல்லை. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று வாதிட்டார்.
மேலும், நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ED தாக்கல் செய்த எதிர் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் உருவாக்கப்பட்டிருப்பது நீதித்துறை நடைமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசு முன்பு எடுத்திருந்த நிலைப்பாட்டிற்கு இது முற்றிலும் முரணாக உள்ளது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : செந்தில் பாலாஜி முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன? பரபரக்கும் தமிழ்நாடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com