கரூர் நெரிசல் மரணம்.. அரசுப் பணி ரத்து.. தமிழக அரசு மேல்முறையீடு?

Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு புதன்கிழமை (ஜூலை 29, 2026) மேல்முறையீடு செய்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: July 28, 2026 at 6:58 pm

Updated on: July 28, 2026 at 7:01 pm

சென்னை, ஜூலை 29, 2026 : கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, த.வெ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீண்டும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தியது” என்று தெரிவித்தார். அவர் மேலும், “இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.

அரசு தரப்பில், பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட பணிகள் சட்ட ரீதியாக நிலைபெற வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும், இதில் எடுக்கும் முடிவுகளினபடி நாளை (ஜூலை 29, 2026) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதனால், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைவரும் கவனமாக காத்திருக்கின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல் மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணிகள் மீண்டும் நிலைபெறுமா என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவை வழங்கும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்.. மத்திய அரசின் பதில் ஏமாற்றம்.. மோடிக்கு விஜய் கடிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com