தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. பியூஷ் கோயல்

Piyush Goyal : தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Published on: May 3, 2026 at 8:00 am

Updated on: May 2, 2026 at 11:57 pm

புதுடெல்லி, மே 3, 2026: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி திங்கள்கிழமை எண்ணப்படுகின்றன; இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்பு முடிவுகள்

தமிழ்நாட்டில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆச்சரியம் நிகழ்த்தும் என்றும் சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இதையும் படிங்க : எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும்.. தொல். திருமாவளவன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com