பாகுபலி வாய்ப்பு கைநழுவி போனது.. ஆர். ஜே பாலாஜி

RJ Balaji : ஆர்.ஜே. பாலாஜி, ‘பாகுபலி’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தன்னிடம் வந்தது, ஆனால் அது கைநழுவிப்போனது என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Published on: May 3, 2026 at 10:00 am

Updated on: May 2, 2026 at 11:48 pm

சென்னை, மே 3, 2026: ஆர்.ஜே. பாலாஜி, ‘பாகுபலி’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தன்னிடம் வந்தது, ஆனால் அது கைநழுவிப்போனது என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், படம் பார்ப்பவர்கள் குரலை உடனே அடையாளம் காண்பார்கள்; அது படத்தின் ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், அந்த வாய்ப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

பாகுபலி படத்தில் நடிகர் ராணா டகுபதி நடித்த கதாபாத்திரத்தின் மகனுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்க ஆர்.ஜே பாலாஜி தேர்வு செய்யப்பட்டார்.
வசனங்களை தமிழில் எழுதிய மதன் கார்க்கி, பாலாஜியை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பை தெரிவித்தார்.

அப்போது, இரண்டு நாள்களில், “உங்கள் குரல் மிகவும் பிரபலம். பார்வையாளர்கள் உடனே ‘இது ஆர்.ஜே பாலாஜி குரல்’ என்று உணர்ந்து விடுவார்கள். அது படத்தில் டிஸ்டிராக்ஸன் ஆகும்” என்று ராஜமௌலி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஏமாற்றம் ஏற்பட்டாலும், ராஜமௌலி எடுத்த தொழில்நுட்ப முடிவு சரியானது என்பதை ஏற்றுக்கொண்டார்.

ஆர்.ஜே பாலாஜி தற்போது சூர்யா – த்ரிஷா நடிக்கும் ‘கருப்பு’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மே 14, 2026 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது, அவர் இந்த ‘பாகுபலி’ அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மைக்கேல் சாதித்ததா? சறுக்கியதா? முதல் வார கலெக்ஷன்ஸ் எவ்வளவு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com