Nine dead in Delhi Vivek Vihar fire : டெல்லி நகரின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் இன்று (மே 3, 2026) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
Nine dead in Delhi Vivek Vihar fire : டெல்லி நகரின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் இன்று (மே 3, 2026) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: May 3, 2026 at 10:04 am
புதுடெல்லி, மே 3, 2026: டெல்லி நகரின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படையினர் 20 பேரை மீட்டுள்ளனர், ஆனால் இன்னும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தீ விபத்து, அதிகாலை 3:13–3:48 மணிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. நான்கு மாடி குடியிருப்பு கட்டிடடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 9 பேர் உயிரிழந்தனர்; உடல்கள் பல்வேறு தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டன என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் மாடியில் 1, இரண்டாம் மாடியில் 5, மூடப்பட்ட படிக்கட்டில் 3 என உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், உடல்கள் தீயில் கருகியதால் அடையாளம் காண முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்களில் 10–20 பேர் மீட்கப்பட்டனர்; 2 பேர் சிறிய காயங்களுடன் குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
12 தீயணைப்பு வாகனங்கள், பேரிடர் மேலாண்மை குழு, போக்குவரத்து போலீஸ், உள்ளூர் போலீஸ் இணைந்து இந்தத் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையில், ஏர் கண்டிஷனர் (AC) வெடிப்பு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், சிலர் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும், இதுவரை தீ விபத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சகோதரி எலும்பு கூடுடன் சென்ற நபர்.. பணத்தை ஒப்படைத்த வங்கி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com