கோடக் மஹிந்திரா வங்கி லாபம் உயர்வு.. நான்காம் காலாண்டு முடிவுகளை செக் பண்ணுங்க!

Kotak Mahindra Bank : கோடக் மஹிந்திரா வங்கியின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், வங்கியின் நிகர லாபம் 13% உயர்வு கண்டுள்ளது தெரியவந்துள்ளது.

Published on: May 3, 2026 at 7:00 am

Updated on: May 2, 2026 at 10:37 pm

சென்னை, மே 3, 2026: கோடக் மஹிந்திரா வங்கி, 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு 13.3% லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரம், வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் நான்காம் காலாண்டில் ரூ. 4,026 கோடியாக இருந்தது. இந்த தனியார் வங்கியின் நிகர லாபம் 2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 3,551 கோடியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது, வங்கியின் நிகர வட்டி வருமானம் , Q4 FY25-ல் இருந்த ரூ. 7,284 கோடியிலிருந்து, ஆண்டுக்கு ஆண்டு 8% அதிகரித்து ரூ. 7,876 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் நிகர வட்டி வரம்பு , கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4.97% ஆக இருந்த நிலையில், Q4 FY26-ல் 4.67% ஆக இருந்தது.

மேலும், கோடக் மஹிந்திரா வங்கியின் மொத்த வருமானம் மார்ச் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 3.4% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 16,712 கோடியாக இருந்த மொத்த வருமானம், நிதியாண்டு 26-இன் நான்காவது காலாண்டில் ரூ. 17,291 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பி.எஃப் கணக்கு தொலைந்து விட்டதா? பி.எஃப் பணத்தை எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com