Donald Trump : ஜெர்மனியில் தனது படைகளின் இருப்பை அமெரிக்கா கணிசமாகக் குறைக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
Donald Trump : ஜெர்மனியில் தனது படைகளின் இருப்பை அமெரிக்கா கணிசமாகக் குறைக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

Published on: May 3, 2026 at 1:04 pm
Updated on: May 3, 2026 at 1:06 pm
நியூயார்க், மே 3, 2026: அமெரிக்கா, ஜெர்மனியில் தன் படைத்தளங்களை பெருமளவில் குறைக்க உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “அமெரிக்கா இன்னும் அதிகமாக குறைக்கப் போகிறது” எனவும், 5,000-ஐ விட அதிகமான படைவீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், “அமெரிக்காவின் படைத்தளக் குறைப்பு, ஐரோப்பாவை தன் பாதுகாப்பை வலுப்படுத்த தூண்ட வேண்டும்” எனக் கூறினார்.
தொடர்ந்து, ஜெர்மனி தனது இராணுவம் மற்றும் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா ஜெர்மனியில் படைத்தளங்களை அமைத்தது. குளிர்போரின் போது, குறிப்பாக 1960களில், சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க படைவீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நண்பனே தீர்த்துக் கட்டிய கொடூரம்.. புளோரிடா பல்கலை மாணவ-மாணவி கொலை.. பகீர் தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com