அடுத்த இரு தினங்கள் ஜில் ஜில்.. டெல்லி வாசிகளுக்கு ரம்மியமான செய்தி!

Delhi Rain and Thunderstorms : டெல்லியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: May 3, 2026 at 1:03 pm

Updated on: May 3, 2026 at 1:06 pm

புதுடெல்லி, மே 3, 2026: டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இதன் படி, மழை, மின்னல், பலத்த காற்று வீசும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அருகில் நிலைத்திருக்கும் எனவும் IMD தெரிவித்துள்ளது.

அதிகப்பட்ச வெப்ப நிலை

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ரிட்ஜ் பகுதியில் 37.4 டிகிரி செல்சியஸ், சஃப்தர்ஜங் பகுதியில் 38.6 டிகிரி செல்சியஸ், லோடி ரோடு பகுதியில் 37 டிகிரி செல்சியஸ், பாளம் பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து, பொதுமக்கள் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், மின்னல், பலத்த காற்று, மழை ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : டெல்லி விவேக் விஹார் பகுதியில் தீ விபத்து.. 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com