மும்பை இந்தியன்ஸை நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பரபரப்பு ஆட்டம்!

CSK Beat MI : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றியை பதிவு செய்தது.

Published on: May 3, 2026 at 11:26 am

சென்னை, மே 3, 2026: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (மே2, 2026) இரவு- பகல் ஆட்டமாக நடந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று மும்பையை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை பேட்டிங் செய்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களின் ஆட்டமே வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

இன்றைய போட்டி

இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன.

இதையும் படிங்க : பால்க் ஜலசந்தியைக் கடந்த 3ஆம் வகுப்பு மாணவன்.. யார் இந்த இஷாங்க் சிங்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com