Naam Tamilar Party Protest: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கட்சி பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Naam Tamilar Party Protest: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கட்சி பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published on: October 3, 2026 at 11:57 am
தாராபுரம், அக்.3, 2026: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கட்சி பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்கியம் சாலையில் உள்ள திருமண மண்டபம் முன்பு வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி பேனரை, புகாரின் அடிப்படையில் போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிர்வாகி ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். கார்த்திகா தலைமையில் கட்சியினர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து, நிர்வாகியை உடனடியாக விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பேனர் அகற்றப்பட்டதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாராபுரம் போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவகாரம் குறித்து பேசினார். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிர்வாகி விடுவிக்கப்பட்டதை அடுத்து, கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : வெற்றிப் பயணத் திட்டம்.. பெண்கள் எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com