வெற்றிப் பயணத் திட்டம்.. பெண்கள் எவ்வளவு தூரம் கட்டணம் இன்றி பயணிக்கலாம்?

Vetri Payanam Scheme : முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்துள்ள வெற்றிப் பயணத் திட்டத்தில் மகளிர் எவ்வளவு தூரம் கட்டமின்றி பயணிக்கலாம் தெரியுமா?

Published on: October 2, 2026 at 10:06 pm

Updated on: October 2, 2026 at 10:07 pm

சென்னை, அக்.2, 2026: தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணித்து வந்த நிலையில், தற்போது எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட கூடுதல் வகை அரசு பேருந்துகளிலும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி, அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பொதுவாக 30 முதல் 100 கிலோமீட்டர் வரையிலும், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் வரையிலும், டீலக்ஸ் பேருந்துகள் சுமார் 30 முதல் 50 கிலோமீட்டர் வரையிலும் இயக்கப்படுகின்றன. எனினும், பெண்களுக்கு ஒட்டுமொத்த பயணத்துக்கு குறிப்பிட்ட கிலோமீட்டர் வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

இதனால், தகுதியான அரசு பேருந்துகளைப் பயன்படுத்தி பேருந்து மாறி மாறி நீண்ட தூரத்துக்கும் இலவசமாகப் பயணிக்க முடியும். உதாரணமாக, சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணத்தில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளை மாற்றி பயணத்தைத் தொடர முடியும். தொடர்ந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரையிலும் செல்லும் வாய்ப்பு உள்ளது.

திருச்சி–திண்டுக்கல், தஞ்சாவூர்–நாகப்பட்டினம், தஞ்சாவூர்–வேளாங்கண்ணி, கோவை–பழனி, கோவை–ஈரோடு, ஈரோடு–சேலம், மதுரை–விருதுநகர், விருதுநகர்–கோவில்பட்டி, திருநெல்வேலி–நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இலவச பயணச் சலுகை கிடைக்கிறது. பெண்களுடன் திருநங்கைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாகப் பயணிக்கலாம்.

திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கூடுதல் அரசு பேருந்துகள் இலவச பயண வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அக்டோபர் 2ஆம் தேதி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டுகளையும் வழங்கினார். இதன் மூலம் தினசரி சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :பெண்கள், திருநங்கைகள் இலவச பயணம்.. வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு CJP Alleges SIR

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com