Vetri Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
Vetri Payanam Scheme: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

Published on: October 2, 2026 at 9:34 pm
Updated on: October 2, 2026 at 9:35 pm
சென்னை, அக்.2, 2026: தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச பயணச் சலுகை, கூடுதல் வகை அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும், 40 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் உள்ளிட்ட சேவைகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். ஏற்கனவே நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த இலவச பயணச் சலுகையும் தொடர்கிறது.
திட்டத்தின் கீழ் தினசரி பயண எண்ணிக்கைக்கோ அல்லது பயனாளிகளின் வருமானத்திற்கோ எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்தம் 18,413 பேருந்துகளில் 12,695 பேருந்துகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார். இதன்மூலம் தினசரி சுமார் 85 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பெண்கள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 2026-27ஆம் ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இலவச பயணத் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக 71.70 லட்சம் பெண்கள் பயணித்த நிலையில், புதிய விரிவாக்கத்தின் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நமக்கே இது பத்தாது; எதற்காக இவர்கள்? மதுக்குடிக்கும் போது தகராறு.. நண்பர் கொலை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com