பள்ளிக்கரணையில் பரிதாபம்.. வேன் மோதி கல்லூரி பெண் ஊழியர் உயிரிழப்பு

Pallikaranai Van Accident: பள்ளிக்கரணையில், வேன் மோதி கல்லூரி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 3, 2026 at 12:10 pm

சென்னை, அக்.3, 2026: சென்னை பள்ளிக்கரணை அருகே வேன் மோதியதில், தனியார் கல்லூரியில் மனிதவள மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்த 29 வயது பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பள்ளிக்கரணை அருண் நகரைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மனைவி மேகலாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.

பணிச்சுமை காரணமாக வியாழக்கிழமை இரவு கல்லூரியிலேயே தங்கி பணிகளை முடித்த மேகலாதேவி, வெள்ளிக்கிழமை அதிகாலை தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாகவும் சாலையின் எதிர்திசையிலும் வந்ததாக கூறப்படும் வேன், அவரது மொபட் மீது மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மேகலாதேவியை பொதுமக்கள் மீட்டு கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் வேனை ஓட்டி வந்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்ற 43 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : நமக்கே இது பத்தாது; எதற்காக இவர்கள்? மதுக்குடிக்கும் போது தகராறு.. நண்பர் கொலை!

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு
CJP Alleges SIR

தமிழ்நாட்டில் 44 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் கைவரிசை.. எஸ்.சி/எஸ்.டி மக்கள் குறி.. சி.ஜே.பி குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com