மின் புகார்களுக்கு உடனடி தீர்வு.. வந்தாச்சு 24 மணி நேர வாட்ஸ்அப் சாட்பாக்ஸ்!

TNEB WhatsApp Chatbot: தமிழ்நாட்டில் மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 24 மணி நேரமும் செயல்படும் புதிய “TNEB WhatsApp Chatbot” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: October 3, 2026 at 12:25 pm

சென்னை, அக்.3, 2026: தமிழ்நாட்டில் மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 24 மணி நேரமும் செயல்படும் புதிய “TNEB WhatsApp Chatbot” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம் மின்தடை உள்ளிட்ட மின்சார சேவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ்அப் வாயிலாக பதிவு செய்யலாம்.

இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் 94987 94987 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு “HI” என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். தொடர்ந்து, மொபைல் எண் அல்லது மின் இணைப்பு எண்ணைப் பயன்படுத்தி புகார் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய சாட்பாட் வசதி மூலம் புகார்களை பதிவு செய்வது மட்டுமின்றி, அவை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விரைவாகச் சென்றடைவதற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார சேவை தொடர்பான பொதுமக்களின் குறைகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் கூறியுள்ளது.

மின்சார சேவைகள் தொடர்பான புகார்களை விரைவாகப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மின்தடை புகார்களுக்காக 24 மணி நேர சேவை செயல்பட்டு வரும் நிலையில், புதிய வாட்ஸ்அப் சாட்பாட் வசதி பொதுமக்கள் தங்கள் புகார்களை எளிதாக பதிவு செய்யும் கூடுதல் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : வீட்டிலேயே தியேட்டர் ரெடி.. சாம்சங் அறிமுகப்படுத்திய Micro RGB R95H.. விலை என்ன தெரியுமா?

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்!
Black rats

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com