Tirunelveli: நெல்லையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tirunelveli: நெல்லையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Published on: May 28, 2026 at 8:47 pm
நெல்லை, மே 28 2026: நெல்லை மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில், பைக் மூலம் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் கஞ்சா கடத்தல் குறித்த ரகசிய தகவல் வந்ததைத் தொடர்ந்து மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல்லிகோட்டை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், கஞ்சா பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய பல்லிக்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார் (வயது 21), ரமேஷ்(22) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துராமன்(24) ஆகிய 3 பேரைபோலீசார் கைது செய்து அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வேலியே பயிரை மேயும் கொடூரம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com