Double Murder Accused Shot, Arrested : நெல்லையில் இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
Double Murder Accused Shot, Arrested : நெல்லையில் இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

Published on: July 10, 2026 at 12:49 pm
திருநெல்வேலி, ஜூலை 10, 2026: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தந்தை மற்றும் 5 வயது மகன் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி அஜித் இன்று அதிகாலை போலீசாரால் துப்பாக்கிச் சூட்டில் பிடிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 2 ஆம் தேதி மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (35) மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக 11 பேரை கைது செய்த போலீசார், மீதமுள்ள குற்றவாளிகளை தேடிக் கொண்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி, உடல்களை வாங்க மறுத்து ஒரு வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஜூலை 9 ஆம் தேதி உடல்களைப் பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அஜித் வீரவநல்லூர் 80 அடி கால்வாய் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை அவர் அரிவாளால் தாக்கியதில் காவலர் பரமசிவம் காயமடைந்தார். தற்காப்புக்காக போலீசார் அஜித்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். தற்போது அஜித்தும், காயமடைந்த காவலரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கரூரில் முதலமைச்சர் விஜய்.. மக்கள் உற்சாக வரவேற்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com